வெள்ளநீர் அபாயம்

அச்சம் அச்சம் அச்சம்
இன்று உச்சம் ஆனதே ..,
மிச்சம் ,

எங்கும் பார்த்தால் நீர்தான்
கார்மேகம் எங்களை
சூழ்ந்ததே ..,

வடக்கே பெய்த வெள்ளம்
நிலை மாறி வருமோ
அச்சம் .

பிள்ளை குட்டிகள் எல்லாம்
படிப்பை பறிகொடுத்ததே
மிச்சம் .

எதுவும் இல்லை எச்சம்
அகதிகளாய் நிற்கிறோம்
பாரும் .

வீடு வாசல் இழந்தோம்
மழை நீருக்கு தானம்
கொடுத்தோம் .

தெற்க்கே வெள்ளம் ஓட
மக்கள் பீதியில் வாட

இயற்கையின் பேரழிவை
இருக்க சொல்பவன்
எவனோ .,

காற்று சுழற்ச்சி ஏற்பட்டது
ஏனோ .,
மழை மேகம் திரளதானோ..,

தங்கி தஞ்சம் கொல்வதினாலே ..
மிச்சம் இல்லாமல் மழை
வருதோ ..,

பஞ்சம் என்று வந்தால்
அது பசிக்கு தானே மனிதா..,

உலக போர் போன்ற அழிவை
மழை வெள்ளம் செய்தது
இங்கே .

மக்கள் துயரை துடைக்க
மனித நேயம் உதித்தது
அங்கே .,

அகந்தை அழிந்து
தீய எண்ணம் ஒளிந்து
அறநெறி வழி

வாழ்வது எங்கே ..,

எழுதியவர் : சு .முத்து ராஜ குமார் (12-Dec-15, 1:05 am)
பார்வை : 82

மேலே