என்னவள்
என்னவள்!
மணிக்கணக்காய்
முன்னால் நின்றே
இரசிப்பாளென……
நினைத்தேன்!
கல்லெறிந்தாள்?
கண்ணாடிகள்!
அழகாய் கிள்ளி
கூந்தலில்…
அழகாய் செருகுவாளென
செருக்கானேன்!
கசக்கினாள்?
ரோஐா மலர்கள்!
கால்களை நனைத்தே
களிப்பாவாளென
களிப்புற்றேன்!
கரையையே..
கடக்கவில்லை?
பாதங்கள்!
குளத்து மீன்கள்!
மழைமேகங்கள்
சூழ்ந்திடவே
தோகை விரித்தே
அகவினோம்!
அகன்றாள் அவள்?
மயில்கள்!
முத்தாக பளபளக்க
கால்களிலே…
கட்டுவாளென்றால்
கண்டுகொள்ளவே இல்லை?
வெள்ளி கொலுசுகள்!
அணியாய் சேர்ந்து
முறையிட்டோம்
ஆண்டவனிடம்…!
அவன் சொன்னான்
”அவள் என்னவளென்றே!”
அழகில்லாததால்…!
------- கே. அசோகன்