என்னவளதிகாரம்--காத்திருப்பு

காத்திருக்கிறது...
என் கைபேசி
உன் தவறிய அழைப்பிற்கு...!!!

காத்திருக்கிறது...
என் கடிகாரம்
உன் காலை வருகைக்கு...!!!

காத்திருக்கிறது...
என் கண்கள்
உன் அழகிய காட்சிக்கு...!!!

காத்திருக்கிறது...
என் வீட்டுரோஜா
உன் கார் கூந்தலுக்கு...!!!

காத்திருக்கிறது...
என் இதழ்கள்
உன் பெயர் உச்சரிப்பிற்கு...!!!

காத்திருக்கிறது...
என் இதயம்
உன் காதல் குடியேற்வதற்கு...!!!

காத்திருக்கிறது...
என் கனவு
உன் அழகிய நினைவிற்கு...!!!

காத்திருக்கிறது...
என் விரல்கள்
உன் விரலகள் சேர்வதற்கு...!!!

காத்திருக்கிறது...
என் சுவாசம்
உன் மூச்சுகாற்றிற்கு...!!!

காத்திருக்கிறது...
என் தேகம்
உன் மேனி தீண்டலிற்கு...!!!

**************************************
...என்னவளதிகாரம்...

உந்தன்
மெல்லிய
வருகைக்காக
நாளும் காத்திருப்பவன்.....!!!!!!

இவன்
பிரகாஷ்...

எழுதியவர் : பிரகாஷ் (22-Dec-15, 9:47 am)
Tanglish : kaathiruppu
பார்வை : 276

மேலே