சிதறல்கள்
எதிர் வீட்டு
நாயை கண்டு
என் பயம் தைரியமாக
துள்ளி குதித்து விளையாடுகிறது..
என்னால் தான்
கடந்து செல்ல முடியவில்லை..
****
சகுனம் பார்க்க வந்த
பாட்டியை பார்த்து..
'இது கெட்ட நேரமென'
பூனை பயந்தோடியது..
****
ஒரு போத்தல் மதுக்காக
நடந்த சண்டையில்..
இரண்டு யூனிட் இரத்தம் வழிந்தோடியது..
****
'ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம்'
அடிக்கோடிட்டு படிக்க வேண்டிய
நாத்திக கொள்கை..
****
எதிர்கட்சியாக இருந்தபோது
மக்களுக்காக சீறிய தலைவர்/தலைவி..
ஆழுங்கட்சியான பிறகு
மௌனம் சாடுவது
எதார்த்த அரசியல்..
***
பாபர் மசூதி இடித்தபோது
ராமர் வனவாசம் சென்றிருந்தாரோ..
தெரியவில்லை..
****
மேல வீதி ராமுவும்
கீழ வீதி சோமுவும்
பள்ளியில் சேர்ந்து
உட்கார்ந்தபோது..
கண்ணுக்கு தெரியாத சாதி..
ஊருக்குள் இருவரும்
பேசிக்கொண்டு நடந்தபோது
கை கால் முளைத்தாடுகிறது...
****