ஒளி தந்து தீயிலிட்டாள்

என் வனப்பு மனம்
அத்தனை வேகமாய்
அடர் கானகத்தை
நிரப்புகிறது. ....
நதியின் ஈரமாய்
உதடுகளை நனைத்து
இதயத்தை குளிர்த்தும்
அவள் வார்த்தை
ஒத்தடங்கள்
ஆற்றாமையின் ஓரத்தில்
அகன்ற வெளியாகி
பாதத்தடம்
பதித்த நினைவுகள்
அவள் பார்வைகள்
அவள்
எனக்குப் பிரியமான
சொல்லிணைவுகளைக்
கொண்ட கவிதை
வினையூக்கி தெளித்த
முளைபயிர்
களை நீக்கி வளர்த்து விட
அந்த கவிதையை
இராகத்தோடு மீட்ட
பல்லாயிரம்
ஆசை என்னுள்
என் அகர மொழியை
கலைய வைக்காத
ஒரு பூவை
மரக்கிளையில்
இருந்து கொய்யாது
பார்த்து இரசிப்பவன் நான். .........
அதன் அழகே
தனி. ........
அது என்
விழிகளை விட்டு
விலகாது ஒருபோதும்
- பிரியத்தமிழ் -