துவலாதே தோழா
தோல்வியைக் கண்டு துவலாதே - தோழா
வெற்றியில் நீயும் உழலாதே
தோல்விகள் வாழ்வினில் வரும்போகும் - தோழா
வெற்றிகள் தாழ்மையில் கரும்பாகும்
தோல்வியே இல்லாத வாழ்வுதனில் - தோழா
வெற்றியே என்றும் வரும்எனில்
முயற்சிகள் வாழ்வில் அற்றுப்போகும் - உன்
திறமைகள் அங்கே இற்றுப்போகும்
துரும்பாய் இராதே; இரும்பாய் இரு - தோழா
வெற்றியை நீபெற கொஞ்சம்பொறு
தோல்விகள் முடிவல்ல உறுதியாய்மறு - விடா
முயற்சியால் வெற்றியை இறுதியாய்பெறு..........