நல்வாழ்த்து
வாழ்வின் நிலை தன்னில் மாற்றம்
வாழ்வின் அடிப்படை தானும் மாறும்
வாழ்வின் அடிப்படை தன்னில் மாற்றம்
வாழ்வின் நிலை தானும் மாறும்
மாறும் எண்ணம் மாற்றம் என்கில்
மாறும் வேகம் மாற்றம் என்கில்
மாறும் பார்வை மாற்றம் என்கில்
மாற்று மெல்லாம் மாறும் மனம்
மனமு ண்டெனின் மார்க்க முண்டு
மனமு ண்டெனின் மாற்ற முண்டு
மனமு ண்டெனின் ஏற்ற முண்டு
மனங் கொள்ளு மெல்லாந் திறனும்
திறன்பல அறிய வாழ்வும் வளரும்
திறன்பல அறிய புதுவாழ்வு மலரும்
திறன்பல அறிய வாழ்வு சுவைக்கும்
திறன்பட வாழ்வ தேநல் வாழ்த்து.
- செல்வா