புத்தாண்டே வருக
உலகமே ............
உன்னிப்பாய்
பார்த்தது ..-ஒரு
பிரசவப்போரட்டம்
கர்ப்ப காலம்
பண்ணிரண்டு மாதங்கள்
என்பதால் ..?
ஆலயங்களில் மக்கள்
வழிபாடு செய்தனர்
நள்ளிரவு வரை ..
நீடித்த போரரட்டம்
இரவு........
பண்ணிரண்டு மணிக்கு
சுகப்பிரசவமாய் ...
பாவம் ...
தாயை காக்க
முடியவில்லை
பிரசவித்து ....
பூமிக்கு வந்த
பூமகளே !புத்தாண்டே ?
வருக !வருக !