காந்த விசை கண்கள்

உன் கண்களின் காந்த விசை
என் உயிரினை இழுத்துக் கொள்ளுதடி
எனைக் கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லுதடி
உயிரற்ற இந்த உடல் உனைக் கண்டும்
காணததாய் மொழியேதும் சொல்லாமல்
கடந்து செல்கிறது வெறும் சவமாய்

என்னிதயமும் உன்னிதயத்தில் தஞ்சமடைந்துவிட்டது
அதன் துடிப்பும் கூட நின்று விட்டது
கந்தல் கந்தலாய் ஆகிப் போனேன் நானும்
உன் ஓர விழிப் பார்வையினால்
உன் விழியும் எனைக் கிழித்தெறிந்து விட்டது
எனை இப்பூமியில் கரைத்து விட்டது

எழுதியவர் : சதீஷ் குமார் (2-Jan-16, 4:41 pm)
பார்வை : 102

மேலே