காதல் தோல்வி-3
அதிவேகமாய்
அதிகாலை எழுந்து
அன்னைக்கு பணியனைத்தும்
ஒதுக்கி வைத்து
ஆடைவிலகா அலங்காரம்
செய்து அண்ணம்
ஒதுக்கி அவசரமென்று
அரசுப்பேருந்து இடிபாடுதனில்
இதோ வருகிறேன்
வந்துவிட்டாயா என
கல்லூரிவாசலில் உன்
சுவாசம் கண்டவளாய்
எவர்விழி எதிர்நோக்காது
கல்வி ஆலயத்தின் ஒதுக்குபுரம்
ஆரத்தழுவியதால் கல்வி
தந்த சாபமோ இந்த
காதல் தோல்வி வேண்டுமோ ?!.........
**************தஞ்சை குணா***********