என்ன சொல்ல போகிறாய்
காற்றைச் சலவை செய்திடவோ
நடையாய் நடை நடந்து
மூச்சிரைக்க பேசினாய் நேற்று ...
பேச்சின் இடைவெளிப்பட்ட நின்
மூச்சுக்காற்றதுவும் எனை முழுதாய்
மூளைச்சலவை செய்துவிட்ட
சேதி அறிவாயோ ?
எங்கோ எப்பொழுதோ தப்பித்தவறி
திட்டுத்திட்டாய் சுவைத்து வந்த
மூச்சமிழ்ததை போதும்போதுமென
திக்குமுக்காடி திண்டாடிடும்படி
சுவாசித்திடும் வாய்ப்பு வழங்கியமைக்காய்
அம்மொட்டை மாடிக்கு
பட்டமிட்டு
பட்டாடை போர்த்தி
பட்டயம் வழங்கிடவா ?
அன்றி,
அழகிய அம்மாலைவேளைக்கு
மாலை மரியாதையென
முறையாய் முறை செய்து
காசோலை கைதரவா ??
என்ன சொல்ல போகிறாய் ???