வேறொன்றுமில்லை

தீர்த்தங்கள் தீப்பொறிகளாய்..
அமிர்தமும் அர்த்தமற்றதாய்..
வேகங்கள் விவேகமற்றதாய்..
வினோதம் விருப்பமற்றதாய்..
சந்தோசமும் சங்கடம் நிறைந்ததாய்..
உன்னைப் பற்றிய எண்ணங்கள்
என்றும் என்னுள்..
வேறொன்றுமில்லை..
விதியோடு போராடும்
சதி என் வாழ்வு..

எழுதியவர் : தீபாகுமரேசன் (18-Jan-16, 11:49 am)
சேர்த்தது : தீபாகுமரேசன் நா
Tanglish : verondrumillai
பார்வை : 97

மேலே