உன்னை எண்ணி மண்ணை அடைகிறேன்
ஓவியமாய்
உ(ன்)னைப்
பார்த்திருந்தால்
இன்று
காவியமாய்
எ(ன்)னை
காவியிட்டு
பாதையில்
நடக்க
வைத்திருக்கமாட்டாய்
கண்கள் கொண்ட தவறால்
காலமெ(ல்)லாம்
உன் ஞாபகங்களுடன்
என் ஞாபகங்களை
மறந்து வாழ்கிறேன்.
பாய்ந்த இடமெல்லாம்
பாறையாய் உள்ளது
போர்வையாய்
நீ வருவாய்
என்றெண்ணி
பாவம் உள்ளம்
கள்ளம் தெரியாது
வாழ்ந்துவிட்டது
நீ எ(ன்)னை கதகலிக்க வைப்பாய்
என்பதை மறந்து
துணிந்து கூறுகிறேன்
காதலின் வலிகள்
மிகக்கொடூரமானது.
கவிஞர் அஜ்மல்கான்
-பசறிச்சேனை பொத்துவில்-