முகம்

முகம்
=========================================ருத்ரா

நான் பின் தொடருகிறேன்.
அன்றொரு நாள்
மின்னல் அருவியை
சல சலக்க வைத்து
ஜாலம் செய்யும் அந்த‌
ஜடையை
முன்னும் பின்னும் போட்டு
என் இதய "லப் டப்" களை
சுருதி மாற்றி
"டப் லப்" என்று
துடிக்க வைத்தவள் யார்?
தெரியாது!
முகம் பார்க்காமலும்
காதல் செய்யலாம்
என்று முன்னுதாரணங்களை
மட்டும் நம்பியே
என் இதய வாசலில்
தோரணங்கள் கட்டி
தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
சடாரென்று
எதிரே ஒரு "மாருதி"
அதற்குள்
காட்சியே மாறி விட்டது.
எங்கோ புதைந்து கொண்டது
அந்த நிலவு.
இடது வலது தெரு சந்துக்களையெல்லாம்
கவனித்தேன்.
ஜனவெள்ளம் வைக்கொல் போராய்
இறைந்து கிடக்க‌
என் வைர ஊசியை
அதில் எப்படி தேடுவேன்?
என் தலையணையோரம்
அவளை ஓவியமாக்கிக்கொள்ள முடியுமா?
என் தூரிகையில் சிக்காமல்
பின் கூந்தலின் சிக்கலை மட்டுமே
முகமாக காட்டிய‌
முகத்தை
என்று தேடுவேன்?
எங்கு தேடுவேன்?

=====================================================

எழுதியவர் : ருத்ரா (23-Jan-16, 9:21 am)
Tanglish : mukam
பார்வை : 128

மேலே