பிரிவோம் சந்திப்போம்

நதி கடலோடு
சங்கமிப்பதுபோல்
ரதி என் உடலோடு
சங்கமித்தாள்

என் கைகள்
தொட்டிருப்பதோ
அவளின் பின்னல் ஜடை
அதுவரை தவம் செய்த
என் மனதில் புத்தன்கூட
போட்டிருப்பதோ பிரியாணிக்கடை

போதி மரத்துப்பூக்கள்
அவள் தலையில்
ஜாதி மறந்துபோனோம்
காதலெனும் ஞான வலையில்

அவளைக் கண்ட கணம்
மேகமானது கண்கள்
மழையானது கண்ணீர்

அவள் எனக்கு
ஐந்தடித் திருக்குறள்
அவளின் குரல்
என்னை குழந்தையாக தேற்றுகிறது
சிலநேரம் குரங்காக மாற்றுகிறது

எங்கள் உடல் மட்டும்
பிரிந்து இருந்தது
மனம் இரண்டும்
பிரிந்து இறந்தது

நான் பட்டம் படிப்பதைவிட
அவளுக்காக பட்டாம்பூச்சி
பிடிப்பதையே விரும்புகிறேன்

அவள் சிரிக்கும்போதெல்லாம்
பல் தெரிவதில்லை அமெரிக்க
பல்கலைக்கழகமே தெரிகிறது

பிறகெதற்குப் படிப்பு
அவள் கை படும்போதெல்லாம்
அதிகரிக்கிறது என் இதயத் துடிப்பு

அவள் கண் படும்போதெல்லாம்
என் முகம் அழகானது
அகம் மட்டும் மெழுகானது

எழுதியவர் : குமார் (25-Jan-16, 4:12 pm)
பார்வை : 220

மேலே