காத்திருப்பு

என் ஒரு சொல் கவிதை நீயடி
அதில் அர்த்தங்கள் அவ்வளவும் காதலடி...

உன் முகத்தினில் சுருண்டு விழும் நெற்றி முடி
அதை ரசித்து கவிகள் எழுதியிருக்கிறேன் பல நொடி..

உன் மடியினில் உறங்க ஏங்கியிருக்கிறேன் பல நொடி
இன்று நிஜமாகுமென எண்ணி வருகிறேன் ஓடி..

என் வாழ்வினில் உன் வாழ்வை சேரடி
என் காதலின் உச்சம் உணரடி...

எழுதியவர் : பர்ஷான் (26-Jan-16, 2:42 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 140

மேலே