ஆசைக் கடல் - லிமரிக்

காலம் கொஞ்சம் இங்கே தப்புதே
சொல்லாமலே மனம் நல்லா முக்குதே
முயற்சி கொஞ்சமில்லை
நல்ல முடிவு வேண்டி
கடவுள் முன்னே கையேந்தி நிக்குதே
***

ஆசைக் கடலில் நாம்போடும் ஆட்டம்
அதுபார்த்து தலையாட்டும் சிலகூட்டம்
பார்க்க ஆளுமில்லை
பலனும் இங்கில்லை
தெரிஞ்சா எடுத்ததுடும் நல்ல ஓட்டம்
***

தேவைகள்பல ஆடுது நம்ம முன்னாடி
எது முக்கியம்னு மனதுக்குள் அடிதடி
எல்லாம் வேண்டும்
மீறும் ஆசைகளுடன்
வாட்டி விழ வாங்கினேன் வட்டி
***

- செல்வா

பி.கு: லிமரிக்(Limerick) ஆங்கிலத்தில் தோன்றிய, ஐந்து வரிகள் கொண்ட சிறிய கவிதை. லிமரிக்கின் ஐந்து வரிகளில் முதலாவது, இரண்டாவது, ஐந்தாவது ஆகிய வரிகளில் ஒத்த ஓசை உடைய இயைபுத் தொடையுடன் அமையும்

எழுதியவர் : செல்வா (28-Jan-16, 6:12 am)
சேர்த்தது : செல்வா
பார்வை : 236

மேலே