தொலைந்ததால் வந்ததித் தொல்லை

என்னிடம் எதுவும் முழுமையாய் இல்லை
உன்னில் தொலைந்ததால் வந்ததித் தொல்லை

வருவேன் வருவேன் எனக் கையடித்துச் சென்றாய்
வராமலேன் இருந்தாய் என்னுயிரைக் கொன்றாய்
வலிய வலம் வந்தென் உடல் வாட்டம் கொண்டேன்
பொலிவும் இழந்த பின்னர் பொய்யெனக் கண்டேன் (என்னிடம்)

அடுத்து அடுத்து நாம் வெகு அருகினில் இருப்போம்
அருகினில் இருந்தும் உள்ள தூரத்தை வெறுப்பொம்
துவக்கு முன்னே முடிந்து விடும் கதையாக
முளைக்கு முன்னே இறந்து விடும் விதையாக (என்னிடம்)

பேசாமலே இருந்தென்னை பயித்தியம் ஆக்கினாய்
தேசாந்திரம் சென்றிட என்னை நீ ஊக்கினாய்
பாம்பென்று உன்னை நான் கண்டு நடுங்கவா
சாம்பலைப் பூசி என் தேகம் ஒடுங்கவா (என்னிடம்)

காசா பெரிதென்று தினமும் என்னை ஏசுவாய்
பாசாங்கு செய்தே செவிடன் போல் கூசுவேன்
ராசா நீ கொடுத்தவை வேண்டாமென வீசுவாய்
ரோசாவிதழ் கொண்டு ஜோ பாதத்தில் பூசுவேன்.

எழுதியவர் : தா. ஜோ ஜூலியஸ் (4-Feb-16, 4:30 pm)
பார்வை : 69

மேலே