இரு உயிர் ஓர் உயிராய்
உன்னைக் கண்டதும்
தரையில் விழுந்த மீனென
என் இதயம் துடிக்க.....
அதை கண்டு கொள்ளாதது போல்
நீ நடிக்க......
என் பார்வையில் நான்
கோபம் காட்ட.....
அதை காணாதது போல்
நீ திரும்ப......
வேதனையில் என்
மனம் கலங்க.....
அதைக் கண்ட உன்
இதயம் துடிக்க....
என் விழி கண்ணீர் சிந்த....
உன் கைகள் என்னை
கட்டி அணைக்க......
சங்கமித்தது
இரு உயிர் ஓர் உயிராய்.......!