மொழியழகன்

பூக்களை பாடி பாக்களை அணிவான்
தேடல்களில் லயித்தபடி தேசம் பல -
கற்பனையோடு கட்டி முடிப்பான்
பேனா அவன் ஆயுதம் காகிதம் அவன் போர்க்களம்

தனிமையின் அரசனாய் அவன்
தன்னை இன்னொரு உயிராய் வர்ணிப்பான்
ஜீவனொன்றை தனக்குள் புகுத்தி
உருவம் கொடுப்பான்

ஆயிரம் பேர் கொண்ட
ஆணவம் அவனுள் அடைக்கலமாய் ...
அதை மறைத்தும் அத்தனை ஆழமாய்
அனுபவம் காண்பான்

ஜீவனப் போராட்டத்தில்
முட்டி மோதி உடைந்து போவான்
வார்த்தை பருகி உயிர் வாயு கொண்டு
மீண்டெழுவான்
உக்கிப் போகாத திமிறு
திசுக்கள் தோறும் கசிந்து ஈரலிக்கிறது


அனுபவம் தான் அவன் உணவு
கவிதைகள் அவன் உயிர் பானம்
வறண்டு போன தொண்டைகள்
நனைக்க .. எச்சிலை விழுங்கி
ஏப்பம் விடும் பெருந்தன்மை
அவனிடம் மட்டும்

அத்தனை கசப்பு இதயத்தின்
நான்கு அறைகள் தாண்டி
நாடிகளோடு தேகம் பரவி
தேவை விளைவிக்க
சுத்தமாய் சோர்ந்து போவான்

அத்தனை சோர்விலும் நிலையிழக்கா
தைரியம் அவன் வசம் -இன்னும்
வார்த்தை வார்த்து
மொழியழகுப் பூக்கள் கோர்க்கும்
செய்முறையில் - விரல்களின்
சாலை பணி புரிந்தபடியே நாளும்...

எழுதியவர் : சஹானா ஜிப்ரி (6-Feb-16, 11:56 pm)
பார்வை : 99

சிறந்த கவிதைகள்

மேலே