வெற்றிகளின் வரையே
வெற்றிகளின் வரையே !
கடலது வரையே
நதிகளின் பயணம் !
பாடலின் முடிவே
சுதிகளின் பயணம்!
காணுகின்ற வரையே
கண்களின் பயணம் !
தீண்டுகின்ற வரையே
தென்றலின் பயணம் !
கதிரவன் வரும்வரையே
வைகறைப் பயணம் !
வற்றும் வரையே
பொய்கையின் பயணம் !
கன்னியர் வரையே
காதலின் பயணம் !
நட்பாகும் வரையே
மோதலின் பயணம் !
எல்லைகள் இல்லாததே!
மனதின் பயணம் !
வெற்றிகள் வரையே
உழைப்பின் பயணம் !
---- கே. அசோகன்.