வானம் -ன்னு பேரா

”வானம்” என்று பெயர் வைத்தேன்
நான் பெற்ற என் செல்லப்பிள்ளைக்கு.

வானம் என்று பேரா? என்று
கிண்டல் செய்தனர் பலபேர்,

கிண்டல் செய்தவரில் ஒருவரை
“உங்கள் பையன் பேரென்ன?”
என்று கேட்டேன்,

எங்கள் பையன் பேரு ”ஆகாஷ்”
அயயா என்றார் அவர்.

அய்யா ”ஆகாஷ்” என்றாலும்
வானம் என்று தான் பொருள்
என்று சொன்னேன்,

தலையைக் குனிந்து நின்றவர்
பின்னர் என்னிடம் ஒன்றும் பேசவில்லை.
=======
आकाश (Hindi) Means "open space, sky"

எழுதியவர் : மலர் (14-Feb-16, 11:32 am)
பார்வை : 78

மேலே