ஹைக்கூ சென்ரியு கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

பனித்துளியில்
வானம்
ஹைக்கூ !

காரம் மிக்க
கடுகு
ஹைக்கூ !

அழகிய
சொற்ச்சிலை
ஹைக்கூ !

உலகம் காட்டும்
முன்றே வரிகளில்
ஹைக்கூ !

வாசிக்கும் நேரம் குறைவு
சிந்திக்கும் நேரம் அதிகம்
ஹைக்கூ !

ஏழைக் குழந்தைகளை
ஈர்த்தது
சத்துணவு !

சென்ற இடமெல்லாம்
சிரமம்
கல்லாதோருக்கு !

களவு போகாதது
களவாட முடியாதது
கல்வி !

முற்றிலும் உண்மை
முப்பால் கூற்று
முயற்சி திருவினையாக்கும் !

வெற்றிக்கு
முதல்படி
நேர்மறை சிந்தனை !

தோல்விக்கு
காரணி
எத்ர்மறை சிந்தனை !

தாழ்வு மனப்பான்மை
தகர்த்திடக் கிட்டும்
வாகை !

உருக்கும்
உடலையும் உள்ளதையும்
கவலை !

மறந்திடு கடந்த காலம்
விட்டுவிடு எதிர்காலம்
மகிழ்ந்திடு நிகழ்காலம் !

இறந்த பின்னும்
வாழ வேண்டுமா ?
செய் தொண்டு !

.


எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (20-Feb-16, 9:37 am)
பார்வை : 130

மேலே