இருமல்
இரவு எப்போதும் பயம் நம்மை சூழந்துகொண்டுதான் இருக்கும்
அது போல தான் ஒரு நாள் இரவு பத்து மணி பக்கத்து வீட்டில் நாய் கத்தியது தெருவில் புதுநாய் வந்தால் கத்திக்கொண்டு இருக்கும் அப்போது என் அப்பா வண்டி சத்தம் கேட்டது நான் கதவை திறந்தேன் அப்பா உள்ளே வரும்போது இருமல் சத்தம் கேட்டது பின்அவர் டிவி போட்டார் அப்போது
பையில் இருந்த பணத்தை எடுத்து உட்கார்ந்து எண்ணிக்கொண்டு இருந்தார் அவர் பெட்டிக்கடை உரிமையாளர் அதுமட்டும் இல்லை நல்ல உழைப்பாளிகூட அவர் பணம் என்னும்போது ஐந்துமுறை
இருமல் வந்துவிட்டது பின் டிவி பார்த்தார் நகைச்சுவை சேனல் பார்த்துக்கொண்டு இருந்தார்
அப்போது அம்மா தோசையை வைத்துவிட்டு சமையலறை சென்றாள் அப்பா பாவம் எப்போதும் உழைத்து கொண்டஇருக்கிறார் அவர் கடன்வாங்கி வீடுகட்டிவிட்டது அதனால் எப்போதும் கடைதிறக்கவேண்டிய நிலை அப்போது அவருக்கு பத்துமுறை இரும்மிவிட்டார் எனக்கு பயம் எதாவதுஆகிவிடுமோ எண்ணி பயந்துவிட்டேன் சரி அம்மாவிடம் இருமல் மருந்து கொடுஎன்றேன்அம்மா கொஞ்சம்இருந்து மருந்து கொடுத்தாள் அப்பா அதனைவாங்கி சாப்பிட்டார்
நான் என் ரூம்க்கு சென்றேன் பக்கத்து விட்டில் நாய் ஊழையிடும் சத்தம்கேட்டது அப்போது சின்னவயசில் பேய் கதை ஞாபகத்துக்குவந்தது நாய் கண்ணுக்கு மட்டும் எமன்வருவது தெரியும் என்பார்கள் பின் நான் கதை புத்தகம் படித்தேன் மீண்டும் அப்பா இருமல் சத்தம் கேட்டது நாய் ஊழையிடும் சத்தம் இன்னைக்கு சிவராத்திரி தான்