பலூன் பாப்பா -புகைப்படம்
என் மூச்சுக்காற்றை
சுமக்கும்
பலூன்....
என் வயது
பாப்பாக்கள்
பலருக்கு
விளையாட்டு
பொருளாய் தெரிகிறது....
வியாபார
பொருட்களாய்
பார்க்கும்
பாப்பாக்களில்
ஒருத்தி நான்....
வண்ணத்து பூச்சியை
கையில் பிடித்து
விளையாட
வேண்டிய வயதில்.....
வண்ண பலூன்களை
கையில் பிடித்து
வியாபாரம் செய்கிறேன்....
யார் இவர்?
என்னை படம்
எடுத்து என்ன செய்வார்?
தனது
கதைக்கும்....
கவிதைக்கும்....
என்னை கருவாக்குவாரோ?
அல்லது
முகநூலில்
என் முகத்தை
வைத்து
லைக்குகளை
பெருக்கி கொள்வாரோ?
என் முகம்
உலகறிய
செய்வதை விட....
ஒரு பலூன்
வாங்கி கொண்டு........
என் உள்ளம்
மகிழ செய்யுங்களேன்...!