தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல்-14

கோபுர வாசலில் கோலமிடும்
கோமகள் அவளொரு நவரசம்
ஆயிரம் ஆசைகள் அரங்கேற்றும்
அவளழகிய விழிகளின் அபிநயம்”

இந்துமா கடலின் செந்தமிழ் சுடராம் - என்
சிந்தையில் அவளென்றும் குங்கும மலராம்
சந்தனக் காற்றில் கூந்தலைக் கோதி
செந்தூரம் பாடும் சங்கம நதியாம்..!

வேதனையில்லா வேல்விழியால் – இந்த
வேலவன் நெஞ்சில் கோலமிடுவாளா..
வேதனைக்கொண்ட என்னுள்ளம் உடனே
சாதனைப் புரிந்து காதல் சரிகமா பாடும்


நான் பாடும் பாடலின் பல்லவிக் கேற்ப
அவளாடும் நடனம் ஆண்மயிலையும் மிஞ்சும்
இராத்திரி கனவில் நான் காண்பதெல்லாம்
அவளன்றி யாரும் இல்லை என்னில் தஞ்சம்

அத்தையின் மகளா என்றால் அவளில்லை
அடுத்தவன் காதலியா அதுவும் அவளில்லை
அவளை பெற்றவர் எங்கே பெண்ணை கேட்க
அவள் முகவரித்தேடி தினம் அலைகின்றேனே....!

எழுதியவர் : இரா.மணிமாறன் (24-Feb-16, 11:50 am)
பார்வை : 50

மேலே