தலைவர்
காமராஜர்
கருப்பு காந்தியே;; உங்கள் அன்பை
ஏந்தியே எங்கள் புனித பயணம்,
ஆறாம் வகுப்போடு நின்றதால் தானோ
ஆறாய் ஒடவிட்டீர் கல்வி நிலையங்களை
தன் தாய் நலம் மறந்து
தமிழ் சேய் நலம் நினைந்தீர்
ஏழையாய் பிறந்த நீர் வாழையாய்
வளர்த்தீர் எம் தமிழ் குலத்தை
நீர் உடுத்த உடைபோல என்றும்
உழைத்த பணி கூட வெண்மைதான்
ஆகட்டும் பார்கலாம் என்பீர் ஆம்
ஆக்கியே அழகு பார்த்தீர் பாமரனை
அகராதியில் உத்தமர் சொல்லின் பொருளே
ஐயா குற்றால அருவி நித்தம்