சிதறிய முத்துக்கள்

கத்திரி வெயில் கொடுமை
அழத்தொடங்கியது வானம் - கோடை மழை
-----------------------------------------------------------
கட்டிக்கிடக்கிறது மனிதம்
கட்டுக்கடங்காத மனம் - சிறை
------------------------------------------------------------
என்னைக் கொன்று
உன்னைக் காப்பாற்றிக்கொள் - எலுமிச்சை
-----------------------------------------------------------
கேட்டு வாங்கும் கேடு - கேரிப்பை
-----------------------------------------------------------
தூக்கம்
கனவுகள் வருவதேயில்லை - மரணம்
-----------------------------------------------------------
சவத்திலிருந்து ஜனனம் - பிரசவம்
-----------------------------------------------------------
பற்றி எரிந்தது
தொட்டுக் கும்பிட்டேன் - சூடம்
----------------------------------------------------------
துடித்துக்கொண்டிருக்கிறேன்
யாரும் கண்டுகொள்ளவில்லை - இதயம்
----------------------------------------------------------
எட்டிப்பிடித்தேன் காற்றை - பலூன்
--------------------------------------------------------
நுரைத்தள்ளியது
அலம்பினேன் - ஷாம்பு
- அரவிந்த்

எழுதியவர் : Aravinth KP (24-Feb-16, 11:13 pm)
பார்வை : 235

மேலே