தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல்-15
மூன்றெழுத்து ஓசை; அதை சிறைப்பிடிக்க ஆசை !
சிறைப்பிடித்து அந்திமத்தில் பூஜை செய்ய ஆசை..!
பாதை மிக எளிது அதில் பயணம் மிக எளிது !
பழக பழக பகிர்ந்தளிக்கும் பருவகால விருந்து !
பூக்களின் நறுமணம் காற்றினில் உலா வரும்
பூவினுள் தேனுண்டு கருவண்டு குஷி பெறும்
வானிலை காற்று வேகமாய் வீசிடும் நேரம்
வான்மேக கூட்டம் துயில் கலைந்து ஓடும்
தேன்மொழி பேசும் கிளி வளர்த்தேன் ! அதை
என் கனிமொழி உனக்கு பரிசளித்தேன்
உன்மொழி பொன்மொழி; ஊருக்கு நன்மொழி !
உயிரே உன் மூச்செல்லம் வாழுது தமிழ்மொழி !
திரைப்போட்ட மேகம் விலகியதால்
பிடிப்பட்ட நிலவு வெளியேறுது
இடைப்பட்ட தூரம் தெரியாததால்
நடு பக்கமாய் அது நகருது...
காலை கதிரவன் தோன்றும் முன்னே
மாலை சந்திரன் மறைவதேனோ..?
கதிரவன் கண்ணொளி படுவதாலே
கறுத்துப் போவோம் என பயம்தானோ ?
புன்னகை சிந்தும் பால் நிலவே
பல்லவி முடிந்தது போவோமா ?
நெஞ்சத்தில் எழும் ஆசைகளை
மஞ்சத்தில் ஏற்றி மகிழ்வோம் வா!