செந்தமிழைக் காப்பாய் நிதம் --- மருட்பா ---- செவியறிவுறூஉ
மாசற்றச் செந்தமிழை மங்காத பைந்தமிழைக்
காசற்றக் கள்வனாய் காக்க மறுக்காமல்
வாசமுள்ள வாக்காய் வகையானச் சொல்லெடுத்துப்
பாசமுள்ள பாடல்கள் பாடுகின்ற ஆற்றல்
வந்திடத் தமிழர் வாழ்வில்
முந்திடும் தமிழாய் முன்னுரை நிறையவே !