மீண்டும் நகரம் கிராமம் ஆகட்டும்

நகரவாசிகளே

ஏன் கிராமவாசிகளை
வித்தியாசமாய் பார்க்கிறீர்கள்...

நிஜமாக
நாங்கள் தான்
உங்களை
விசித்திரமாக
பார்க்க வேண்டும்

செவ்வாய் கிரகத்தில் இருந்து இறங்கி
வந்து விட்டார்களோ...

என்ன உடை இது...
கலாசாரத்திற்கு புற(ர)ம்பான உடை...

என்ன உணவு இது...
நம் சீதோஷணத்திற்கு
அபத்தமான(ஆபத்தான)
உணவு முறை...

நகரவாசிகளே
மனிதர்களையும்
மனிதத்தையும்
எங்கள் ஊர்
திருவிழாக்களிலும்
திண்ணைகளிலும்
தெம்மாங்கு பாட்டுகளிலும்
வாழ்ந்து பார்க்கலாம்...

வரப்பு வழி ஓரமா
துன்பங்கள ஒளிச்சி வச்சோம்...
சோறு போட்ற கடவுளுக்கு படையல்
போட்டோம்...

நகரவாசிகளே
இங்கயும்
Face Book
Twitter
Whats App
Email
WiFi னு
எல்லா வசதியும்
கெடைக்குது...

இப்ப நீங்க
இருக்கற
இடத்தையும்
கிராமம மாத்தலாமில்ல

மாத்த முடியலனாலும்
பரவாயில்ல
கிராமத்த அழிச்சிடாதீங்க...

$$$$$$$$$$$$$$$$$$$$

நிலமெல்லாம்
கான்கீரிட் விவசாயம்
பண்ணா
சாப்பாடு என்ன கலவையா...
குடிநீரா சுண்ணாம்பா...

~~~~~~~~~~~~~

இத படிச்சிட்டு எத்தனை பேரு திட்டுவீங்களோ?
தெரியல...

ஆனா

யோசிங்க
வாழனுமில்ல...
அதுக்கு
சோறு முக்கியமில்ல.....

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (26-Feb-16, 8:12 pm)
பார்வை : 311

மேலே