தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல்-20

தொகையறா

அட பொம்பள பொறுக்கிகளா
பொட்டச்சியிடம் மொத்து வாங்கனீங்களா..
ஆம்பளையா பொறந்துப்புட்டு…
பொம்பளக்கிட்ட முதுகு காட்டி ஓடுனீங்களா…
வாங்கினதுப் போதுமா ?
இன்னும் வாங்க வேணுமா ?
கல்யாணம் முடிச்சிருந்தா
கால் கட்டு அவிழுமா…!

பல்லவி

அடி - அடி – அடி; அடிப்போடு ! அடிப்போடு !!
அவனுங்க இன்னமும் மொறைக்கிறானுங்கப் பாரு !
தர்ம அடிப்போடு ! தாடையில சூடுப்போடு !

எம்மாத்தம் பசங்கடா நீங்கயெல்லாம்
என்னைப்பாத்து கண்ணடிக்கும் நொள்ளக்கண்ணா
ஏழரை கழுதை வயசு எனக்காகுது – இனி
எனக்கெப்போ வாலிபம் திரும்பப் போகுது…?

ஆத்தூரூ பக்கத்துல வாக்கப்பட்டு
ஆரேழு புள்ளைகள பெத்துப்போட்டு
பேரன் பேத்தி எடுத்த பாட்டி- நான் !
என் பேத்திக்கு நாளைக்கு நிக்கா தான் !

மங்கைப் பருவம் முடிந்து நான்
தெரிவை பருவத்தில் இருக்கின்றேன் !
என்னை அங்கையர் கன்னி என்றழைக்கும்
உன் அறிவை செருப்பால் அடிக்கின்றேன் !

அட என்னங்கடி பாத்துக்குட்டு நிக்கிறீங்க; போடுங்கடி !
( குழு )
அடி - அடி – அடி; அடிப்போடு ! அடிப்போடு !!
அவனுங்க இன்னமும் மொறைக்கிறானுங்கப் பாரு !
தர்ம அடிப்போடு ! தாடையில சூடுப்போடு !

பித்தலாட்டம் பண்றவன் சிறை கம்பில
பொம்மலாட்டம் காட்றவன் திரை மறவுல
காக்கா வேஷம் போடுறவன் ஊர் வாயில
காம கோஷம் போடும் நீங்க எங்க கையில

துடப்ப அடி வாங்கினது நீங்க திருந்த;
திருந்தலனா நீங்க நல்ல பிறவியில்ல;
இனிமே இந்தப்பக்கம் திரும்பாதீங்க
திரும்புனா திருப்பதி மொட்டைதாங்க !

அட என்னங்கடி பாத்துக்குட்டு நிக்கிறீங்க; போடுங்கடி !
( குழு )
அடி - அடி – அடி; அடிப்போடு ! அடிப்போடு !!
அவனுங்க இன்னமும் மொறைக்கிறானுங்கப் பாரு !
தர்ம அடிப்போடு ! தாடையில சூடுப்போடு !

எழுதியவர் : இரா.மணிமாறன் (1-Mar-16, 10:25 am)
பார்வை : 76

மேலே