தண்ணீர் தண்ணீர் தண்ணீர்

..."" க(த)ண்ணீர் தேசமிது ""...
குமரிகள்கூடி குடமெடுத்து
குதூகலமாய் பவனிவந்த
களிப்பான காலத்தினின்
சுகமான நினைவுகளோடு ,,
தெருக்களில் ஒன்றுகூடி
குடங்களின் அணிவகுப்பு
வாரம் இருமுறைதான்
வந்தாலும் ஒரு குடம்தான் ,,,
குடங்கள் கண்ணீர் வடிக்க
குடும்பம் சந்திசிரிக்க
போரிடும் ஜான்சிராணிகளும்
தேசிங்கு ராசாக்களும் ,,,
என்றும் நடுத்தர வர்க்கங்களே
பாவாடை எடுத்துச்சொருகி
கைலிகளை மடித்துக்கட்டி
மல்லுக்கட்டும் அவலங்கள் ,,,
குடிசைகளாய் இருந்தபோது
குழாயடி குடிம்பிச்சண்டை
அடுக்குமாடி குடியிருப்பில்
அடிதடிக்கு உயர்ந்துவிட ,,,
நெல்லுக்கும் தண்ணியில்லை
விவசாயியோ விசம்குடிக்க
விசயமில்லை எனக்கென்றே
"புல்"லாகவே திரிகின்றார் ,,,
அண்டை மாநிலம் தந்திட
மறுப்பதும் அண்டைவீட்டார்
எதிரியாவதுமிந்த தண்ணீரே
இதுவும் நாகரீக வளர்ச்சியோ ,,,
குளிக்கவும் தண்ணீரில்லை
குடிக்கவும் தண்ணீரில்லை
மீத்தேனை பிரித்தெடுத்து
பிணங்களை எரித்திடவா ,,,
என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...