என் நீ

என்
உதயத்தின்
சூரிய
வெளிச்சம் நீ!

என்
அந்தியில்
குளிரும்
சந்திரன் நீ!

என்
தாகம்
தீர்க்கும்
மேகம் நீ!

என்
தனல்
சுடும்
தீ நீ!

ஆம்,
உன் நான்
ஆகி விட்ட
என் நீ!

என்னில்
கரைந்து
உன்னில்
மறைந்தேன்
என்பேன்,

காதலே,
என் எண்ணமெல்லாம் நீ,
அதனால் இங்கே
என் எழுத்தானாய் நீ....!

எழுதியவர் : செல்வமணி (4-Mar-16, 8:26 pm)
Tanglish : en nee
பார்வை : 113

மேலே