காமராஜர் ஒரு சகாப்தம்
கருப்பு உடம்பில் .... வெள்ளை மனதாய்
வேட்டி சட்டையில் வாழ்ந்தவரே
கோட்டையில் இருந்தும் மேட்டுக்குடி
வாழ்க்கை நடத்தாதவரே
பிள்ளைகலெல்லாம் கல்வி கற்க
எல்லைதோறும் பள்ளி திறந்தவரே
பள்ளி வந்த பிள்ளை பட்டினி இல்லையென
மதிய உணவு தந்தவரே
நடிகர்கள் ஆட்சி செய்த தமிழகத்திலே
நடிக்கத் தவறிய தலைவனே
நாட்டில் கோடித் தலைவர்கள் இருந்தாலும்
மக்கள் நாடி அறிந்தவரே
இறந்த பின்னும்
என் கவிதையில் எழத்தாய்
ஓவியத்தில் வண்ணமாய்
ஏழைகளின் சிரிப்பாய்
நான் படித்த கல்விக்கு வித்தாய் வாழ்பவரே
காமராஜர் அய்யாவே,...