இரவு கிடத்தியவள்-சுஜய் ரகு

பறவைகளின் கூடுகளை நிலவொளியில்
காட்சிக்கு வைத்திருந்தன கிளைகள்
இலையுதிர் காலத்தில்
ஒரு மரமென மௌனித்திருந்தேன் நானங்கு
நீயோ காற்றாய் விரவி அதகளப் பட்டிருந்தாய்
ஒரு கட்டத்தில் யாசிக்கத் தொடங்கினேன்
அடர்வனப் பாதையின் இருளில்
உருண்டோடும் இலைகளிலிருந்து
என் காதலே மீள்கவென
எப்பொருட்டுமின்றி அமானுஷ்யமிக்க
ஓர் பெரு இரவை என் மடிகிடத்திக்
கடந்து போகிறாய் நீ...!

எழுதியவர் : சுஜய் ரகு (8-Mar-16, 10:20 am)
பார்வை : 189

மேலே