சிதையாத சீதைகள்
இக்கால பெண்கள் யாரும்
சீதை இல்லை என்று
புலம்பிடும் நவீன ராமனே...
கவர்ச்சி நடிகையை சீதையாய்
கண்டு கழித்த உனக்கு
எப்படித் தெரியும்.....
தன் சுயத்தையும்
சொந்த குடும்பத்தையும் காக்க
படி தாண்டி பணி செய்திட...
தினம் நூறு ராவணன்களை
பார்த்து...பேசி...கடந்து...
பத்திரமாய்த் தன்னைக் காத்து
வீடு வந்து சேர்ந்திடும்
இக்கால நவீன சீதைகளை....!!!
அக்காலமோ இக்காலமோ
சீதையாய் இருந்தாலும் சோதித்துப் பார்க்கும்
ராமன்களே இங்கு உள்ளனர்....!!!
சோதித்தாலும் சிதையாமல்
நெருப்பாய் நிரூபித்திடும்
சீதைகளும் இங்கு தான் உள்ளனர்..!!!
~ தப்தி செல்வராஜ், சாத்தூர்