ரேகையில் தெரிந்தது
இயல்பாகவே ஆள்நடமாட்டம்
குறைந்து போகும்
சாலையின் ஓரத்தில்
எதிர்பார்ப்பில் தேங்கியிருந்து
சரியான நேரத்தில்
சட்டென வீசிய அமிலத்துளிகளில்
வியர்வை துளிபட்டு
தெறித்து ஓடிய அவன்
வெகுநேரமாய் வெறித்து
பார்த்துக் கொண்டிருக்கிறான்
கண்ணாடி முன்
தன் முகத்தில் தென்படும்
காதல் ரேகைகளை..?