முகங்களின் முகவரிகள்

சிரிப்பை அடக்க முடியாத
சில முகங்கள்

சிரிப்பே தெரியாத
சில முகங்கள்

கன்னம் உப்பிப் பூரித்த
சில முகங்கள்

தாடை தெரிய இடுங்கி ஒடுங்கிய
சில முகங்கள்

அழகாய் வாலிப முறுக்கு
மிடுக்கில் திமிறுகிற
சில முகங்கள்

எதையோ தொலைத்துத்
தேடுகிற
சில முகங்கள்

எதற்கோ காத்துக் கிடக்கிற
சில முகங்கள்

எதையோ நினைத்து
அழுகை வடிகிற
சில முகங்கள்

எல்லாப் பேருந்து
நிறுத்தங்களிலும்
பயணித்துக் கொண்டே
இருக்கின்றன
சில முகவரிகள்

அடையாளம் இழந்து
இல்லை
அடையாளம் களைந்து

எதிரில் தட்டுப் படுவன
முகங்கள் மட்டுமா ?

எழுதியவர் : அன்புபாலா (16-Jun-11, 6:35 pm)
சேர்த்தது : anbubala
பார்வை : 389

மேலே