சொல்லும் விதம்

தட்டிச் சொல்பவன்
சண்டைப் பிரசண்டன்,
தயங்கி சொல்பவன்
பயந்தான் கோழி,
சாதுரியமாய் சொல்பவன்
விவேகம் உள்ளவன் ,
சாட்சியாய் சொல்பவன்
அழையா எதிரி,
சங்கோஜமாய் சொல்பவன்
சந்தர்ப்ப வாதி ,
அன்பாக சொல்பவன்
நியாயம் தெரிந்தவன் ,
ஆத்திரமாய் சொல்பவன்
முன் கோபி ,
நிதானமாய் சொல்பவன்
நியாயம் உள்ளவன்,
நீதியாய் சொல்பவன்
நேர்மை கொண்டவன் ,
உண்மையாய் சொல்பவன்
உறுதி உள்ளவன் ,
உரக்க சொல்லுபவன்
அதிகாரம் கொண்டவன்,
தெளிவாய் சொல்லுபவன்
விரிவுரையாளன் ,
தோரணையில் சொல்பவன்
கவிஞன் ,
காலத்தை சொல்பவன்
யோதிடன் ,
காதலை சொல்லுபவன்
எதையும் தாங்குபவன்,

எழுதியவர் : பாத்திமாமலர் (15-Mar-16, 10:57 am)
Tanglish : sollum vitham
பார்வை : 165

மேலே