நட்பே எங்கள் வாழ்க்கை

ஓர் ஊர்ல 3 தோழிகள் இருக்காங்க.
அவங்கள எல்லாரும் SJP னு தான் கூப்டுவாங்க...


3 பேரும் சரியான
அரந்த வாலுங்க...
யார் பேச்சையும் கேக்காதுங்க...

3 பேரையும் பிரிக்கணும்னு நெறையா பேர் இதே பொழப்பா சுத்திகிட்டு இருந்தாங்க.

அதலாம் அவங்களால முடியுமா...
(நாங்க (SJP)இல்ல மனசு வைக்கணும்...)

உதாரணத்துக்கு:
தனி தனி வீடு கொடுத்து அதல இருக்க சொன்னாங்க...
ஆனா நம்ம Friends அதலாம் அவங்க மூஞ்சிலேயே தூக்கி எறிஞ்சிட்டு வந்து
திருப்பியும் அவங்க கூட்டுக்கே வந்து வாழ்ந்தாங்க

இப்படி இடைஞ்சல் கொடுத்துட்டே இருந்த சமயம் .
ஒரு நாள் அந்த ஊருக்குள்ள சுனாமி
வரபோகுதுனு எச்சரிக்கை கொடுத்துட்டாங்க.

SJP வீடு மட்டும் தான் கடல் பக்கத்துலயே..
அதனால அவங்க நம்ம கிட்ட வந்து உதவி கேப்பாங்க. நாம 3 பேரையும் வேற வேற வீட்டுக்கு அனுப்பி பாக்கவிடமா பண்ணிடலாம்.
இப்ப எப்படியா இருந்தாலும் 3 பேரும்
பிரிஞ்சி தானே ஆகணும் அப்படினு யோசிச்சிட்டு இருந்த சமயம் .

3 பேரும் கெட்டிமா இருக்கி கைய பிடிச்சிகிட்டாங்க..

எந்த சமயத்துலயும் விடாத கைய இப்ப விட்ருவாங்களா!

திருடன் வந்து கழுத்துல கத்தி வச்ச சமயம்...
நீலா சோறு ஊட்டும் போது...
இருட்டுல தனியா நடக்கும்போது...
சாலையில நடக்கும் போது தனியா கை தவறி போய்டா வண்டி வரும் தருணம் கைய பிடிச்சி இழுக்கும் போது...


கடைசியா ஒரு தடவ 3 பேரும் பாத்துகிட்டே இருந்தாங்க..
அப்புறம் 3 பேருக்கும் என்ன தோணுச்சினு தெரியல கட்டி பிடிச்சிகிட்டாங்க...

மனசுகுள்ள 3 பேருமே மீதி 2 பேரையும் எப்படியாவது காப்பத்திடணும்னு நெனச்சிட்டே இருந்தாங்க...

வீட்டுக்குள்ளே இருந்தா
நம்ம நட்பு இந்த ஊர் மக்களுக்கு தெரியாது
இந்த உடம்பு இந்த மக்களுக்கு கெடைக்குமோ கெடைக்காதோ?னு
யோசிச்ச SJP
கைய கோத்துகிட்டு தெருவுல நடக்க ஆரம்பிச்சாங்க...

ஊரே அபயம் எதிர்பாத்து வராங்கனு நெனைச்சுது ஆனா அவங்க கைய பிடிச்சிருக்க தோரணை
அத இல்லனு சொல்லிச்சு மக்களுக்கு...

3 பேரையும் ஒன்னாவே தங்க வைக்கலாம்னு நெனைக்கும் போது
சுனாமி வர வீட்டுக்கு ஓட ஆரம்பிச்சிட்டாங்க.

ஆனா அவங்க 3 பேரும்
நம்மள பிரிக்கணும்னு நெனச்சவங்க கிட்ட போய் அடைக்கலம் கேக்ககூடாதுனு
பிடிச்ச கைய விடாம நின்னுட்டாங்க.
ஊரே திரும்பி அவங்களையே பாத்துட்டு இருந்துது

கடைசியா தண்ணீ அவங்கள கொண்டுட்டு போனத பாத்துட்டு இருந்தாங்க..

3 பேரும் நெனச்சத நிறைவேத்தணும்னு நெனச்சாங்க.3 பேரும் எதிர் நீச்சல் போட்டுகிட்டு இருந்தாங்க..

கடைசியில ஒரு பாறை இடுக்குல போய்டு மாட்டிகிட்டாங்க...

ஊரே பாத்து பொறாமை பட்ட அந்த நட்ப கடவுள் பிரிக்க கூடாது இவ்ளோ சீக்கிரம்னு நெனச்சிருப்பாரு...

அப்பறம் சுனாமி ஓஞ்சி முடிச்சதுக்கு அப்புறம்...
3 பேரும் மீண்டு வந்தாங்க...

அந்த 3 பேருக்கும் பெத்தவங்க கல்யாணம் பண்ணி வச்சாங்க...

ஊரே சொல்லுச்சி கல்யாணம் ஆகிடுச்சியில்ல
இதுக்கு அப்புறம் அவங்க நட்பையும் சேத்து மூட்ட கட்ட வேண்டியது தான்..

ஆனா இவங்க 3 பேர பத்தி தான் நமக்கு நல்லா தெரியுமே.
இதுங்களா சும்மா இருந்துருக்குங்க.

3 பேரும் அவங்க 3 கணவன்மார்களையும் கூப்டு வச்சி . காலத்துக்கும் நாங்க ஒன்னா இருக்கணும்.
அதுக்கு நீங்க எங்களுக்கு உறுதுணையா இருக்கணும்னு சொல்லி
பெங்களூர் நாட்களா
அவங்க வாழ்க்கைய ஆரம்பிச்சாங்கன்றது
அவங்க வாழ்ந்த வாழற நாட்கள்ல இருந்து
அந்த ஊர் மக்கள் தெரிஞ்சிகிட்டாங்க......

~ SJP

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (16-Mar-16, 2:03 pm)
பார்வை : 258

மேலே