காதல் வலியா

காதல் என்றால் என்ன
என்று தெரியாத வயதில்
என் வாழ்வுக்காய் உன்
மீது காதல் கொண்டேன்
என் வாழ்வு எல்லாம்
நீ என்று உணர்தேன்
இதனால் உள்ளம்
முழுவதும் நீயானய்...

உன்னை பற்றி எதுவும் தெரியாமல்
ஆயிரம் இனிமை கனவுகளை
என்னில் வளர்த்தேன்....

காலங்கள் மாறினால் நினைவுகள்
தேங்கி நின்று வாட்டுவது போல
உன் காதல் மாறியதால் நினைவுகள் எல்லாம்
ரணமாய் மாறி என்னில் உறைந்து கொள்ளுதடி

எழுதியவர் : கலையடி அகிலன் (22-Mar-16, 4:23 am)
பார்வை : 1947

மேலே