நான் நியூட்டனின் பேரன்

நான் வளைவுகளின்
நிமித்தம்
உயர்தலின் கனவை
விட்டு விடுவதில்லை...
உயர்ந்த கழுகின்
வானத்தில் நுனி பிடிக்கத்
தெரியா பிறழ்ந்த
பூச்சிகளின் இறுமாப்பை
எட்டி இன்னொரு முறையும்
உதைத்து விட்டு
பாரதி பாட்டனைப் போல

'காலா வாடா....ங்கொய்யால'

என மீசை முறுக்கித் திரிகிறேன்...
சுற்றும் சூழ பெரும்படை
கொண்டும்
பேரிடர் சூழ்ந்தும்
வீழ்வதில்லை...நான்.
மாறாக வேரூன்றி
விதையாகி விருட்சம்
செய்தே வீணையும் வாசிப்பேன்...
என் கதவுகளை
நான் தான் அடைக்க வேண்டும்...
திறக்கவும் வேண்டும்...
எட்டி உதைக்கும்
வெளியில் எவன் பந்தும்
எகிறலாம் இவன் யாரென்று
தெரிகிறதா என்று...
சொட்டும் நீர்வீழ்ச்சிகள்
வெறும் அக்கரைக்
கதவடைப்பென்ற மறுமுனைக்
கூவலில் நான் நீக்க மற
நின்ற யாப்பிலக்கணம்...

புரியலன்னா
புண்ணாக்கு பூனை
மாதிரி நக்கி குடி..

நானென்ற திமிரின்
தலைக்கனம் எனக்கும் உண்டு
மசிரு மாதிரி அல்ல
மண்டைக்குள் இருக்கும்
அறிவு மாதிரி....

நான் தெரிவுகளின்
நிமித்தம் சற்று திறந்தே
கிடக்கிறேன்...
அள்ளி அணை அல்லது
கொள்ளி வை...

எதிர்வினையில் நான்
நியூட்டனின் பேரன்...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (23-Mar-16, 12:10 pm)
பார்வை : 703

மேலே