வண்ணமிழந்த பாவாடை
![](https://eluthu.com/images/loading.gif)
அவள் அதுவரை
தொடங்கிய புள்ளியில்
வண்ணம் இருந்தது...
அன்று கடந்த
வண்ணத்தில் கிடந்து
தவித்தது
சிறகைத் தொலைத்த
அவளின் வண்ணத்துப் பூச்சி....
தொலைதலின்
புள்ளிக்குள் வண்ணங்கள்
சிதறிக் கிடந்தன....
சிதறிய
துளிகளையெல்லாம்
எடுத்தள்ளி
இதுவரை மறைத்து வைத்த
பாவாடையை பிடுங்கி விட்டார்கள்...
கையோடு தாவணி துறந்த
பொழுதொன்றில்
அடுத்த ஊருக்கு
வாக்கப் பட்டிருந்தாள்..
அப்போதும் பதினாறு வயதுதான்...
என்றபோதும்
ஏனோ பருவம் தொலைத்திருந்தாள்...
அவள் தொடங்கிய புள்ளியில்
யாரும் காணாத வெளியாகி
படபடத்துக் கிடந்தது
அவள் தொலைத்த
வண்ணமிழந்த பாவாடை...யும்.
கவிஜி