முட்டையிடும் மனிதர்கள் - என் கனவு
முன்னம் ஒரு காலத்தில் இருந்த
மனிதன் ஒருவன் முட்டையொன்று இட்டான் - அந்த
முட்டை பொரித்தது! பிறந்தது ஒரு அழகிய பறவை;
இறக்கைகளற்ற அந்தப் பறவை
கால்களில்லாத சிலந்திகளைப் போல
காட்சியளித்தது வேடிக்கையே;
அந்தச் சிலந்திகள் விரைவில் முட்டையிட்டன,
சிலந்தி முட்டைகள் ஓர் நாள் பொரித்தன,
அங்கே முட்டையிடும் மனிதர்கள்!
கண் விழித்துப் பார்த்தேன்,
அங்கே சிலந்திகளும் இல்லை,
முட்டையிடும் மனிதர்களுமில்லை,
இவையெல்லாம் என் கனவு!
Ref: poem 'Men That Lay Eggs' by Poet Richmoo silverstein