கோலம்

*அவள்
கோலம் போட்டுவிட்டு
போனபின்
வாசலில் அமர்ந்தபடியே
கோலத்தை அழிக்காதீரென்று
எல்லோரிடமும் சொல்கிறேன்
எனினும்
எப்படி சொல்வதென்றுதான்
தெரியாமல் முழிக்கிறேன்
எறும்புகளிடம் மட்டும்*

எழுதியவர் : சுகுமார் சூர்யா (25-Mar-16, 9:33 pm)
Tanglish : kolam
பார்வை : 79

மேலே