காதல் வேட்கை

உன் கண்கள் காதல் காமம் இரண்டும் வீசியது,
என் இளமை இரண்டும் தேடி ஓடி வருகிறது...
உம் விரல்களிங்கே தலையை அன்பால் கோதியது,
என் விரல்களும் உந்தன் நெஞ்சுக்குழியில் தவழ்கிறது...
உன் வெப்பக்காற்றென் காதின் ஓரம் சுடுகிறது,
என் இதழும் உந்தன் நெஞ்சம் தேடி அலைகிறது...
உன்னிதழ் கொண்டு என்னிதழ் மூடி காதல் முத்தம் இடுகையில், இதழின் வழியே அது உயிரை எடுத்துச் செல்கிறது...
என்னுயிரும் உன்னிதழ் வழியே இதயத்தில் கலந்து, உன் பெண்மை, என் ஆண்மை இரண்டையும் பெருக்கியது...
புல்லாங்குழலின் இசையும் கூட சுடுகிறது,
உந்தன் முனகல் சத்தம் என்னைத் தட்டி எழுப்பியது...
வெய்யில்கால பனியைப் போல உந்தன் தேனிதழ் முத்தம் என் உதட்டை நனைத்தது...
உன் வளைந்த மெல்லிடையை என் விரல்களும் தேடிச் செல்கையில் காலமேயிங்கு வீணானது, மெல்லிடை தொட்டதும் என் உதிரம்கூட சூடானது...
கடலின் மடியில் நிலவைப் போல நாம் சேர்கையில் இங்கே விண்மீனும் வெட்கம் கொண்டது, நம் காதல் மழையில் கடலின் அளவும் கூடியது...
உன் நாணம் இங்கு தோற்றுப் போகும்
என் ஆண்மைக் கருகில்,
என் காதல் இங்கு கூடிப் போகும்
உன் பெண்மைக் கருகில்,
ஊடுருவ முயன்று காற்றும் தோற்கும் நம்மில்,
குளிருமிங்கே கரைந்து போகும் நம் வெப்பக்காற்றில்,
அலையின் வேகமும் கூடிப் போகும் நம் மூச்சுக் காற்றில்,
நிலவும் அங்கே காதல் செய்யும் நம் காமம் கண்டு,
விண்மீனும் கூட மறைந்து கொள்ளும் நம் தாகம் கண்டு,
மழையும் கூட நின்று கொள்ளும் நம் ஆசை கண்டு,
நெருப்பும் கூட வெட்கிக் கொள்ளும் நம் தேகச்சூடு கண்டு,
உன்னுள் நானும், என்னுள் நீயும்
உருகித் தொலைந்து போவோம்,
இயற்கையை வென்று,
என் காதலி..!!!

எழுதியவர் : வெண்தேர்ச்செழியன் (28-Mar-16, 1:46 pm)
பார்வை : 2755

மேலே