அழையா விருந்தாளி

தினமும் வருகிறார்,
படியேறி வருகிறார்,
பவ்யமாக வருகிறார்,
வரவேற்பு அறையைத்
தாண்டமாட்டார்!

நாங்கள் பார்த்து விட்டு
கம்பெடுத்து தட்டினால்
தத்தி தத்தி சென்றிடுவார்,
கதவுக்கடியில் கச்சிதமாகப்
பின்வாங்கி நடையைக் கட்டுவார்!

அவர் எங்கள் வீட்டு
அழையா விருந்தாளி,
என் பேரக் குழந்தைகளுக்கு
வேடிக்கை வித்தகர்,
அவர் பெயர் தவளையார்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Mar-16, 10:22 pm)
பார்வை : 146

மேலே