இயற்கையின் கூற்றுத்தான்

​இடிந்திட்டஎன் இதயத்தை
இடரின்றி சீர்செய்திடவே
இடைவேளை தேவையென
இதுவரை ஒதுங்கியுள்ளேன்
இதனையறிவர் புரிந்தோர் !

இகழ்ந்திடுவர் ஒருசிலரும்
இன்னும்எனை பின்னாலே
இருப்பினும் நல்இதயங்கள்
இதயத்தின் வலிநீக்கிடவே
இன்றுமுளர் தொடர்பினிலே !

இருநிலை இருகொள்கை
இருநோக்கம் இருபார்வை
இருந்ததில்லை என்னிடம்
இருந்திடாது என்வாழ்வில்
இறுதிமூச்சு உள்ளவரை !

இன்றுள்ள அரசியலாய்
இடமாறும் கூட்டணியாய்
இதயங்கள் நிலைமாற்றம்
இத்தளத்தில் நிகழ்வதும்
இயற்கையின் கூற்றுத்தான் !

பழனி குமார்
30. 03.2016

எழுதியவர் : பழனி குமார் (30-Mar-16, 9:35 am)
பார்வை : 265

மேலே