வயதான வேளையில்
வயது ஒன்று நிற்காது
மணியும் நில்லாது
வயதும் மணியும்
நிற்காது நில்லாது.
திரும்பி திருப்பி
சொல்கிறேன் என்றாவது
வயதாகும் வேளையில்
ஓட முடியாமல்.
மறதி வரும் நேரம்
மறந்து போகும் எல்லாம்
வயதான் வேளையில்
நினைக்க முடியாமல்.
தடுமாறும் காலம்
வீழ்ந்து விடும் யாவும்
வயதான் வேளையில்
தடுக்க முயலாமல்.
தட்டு தடவி நீக்கி நீங்கி
சிரித்து சரிந்து அழுது அழுகி
வயதான் வெளியில்
வாழ்ந்து நோகாமல்
சாகும் தறுவாயில்
கழித்து சலித்து கவிழும்
வயதான் வேளையில்
இறக்கத் தெரியாமல்.
இறப்பதும் வாழ்வதும்
கையில் இல்லை என்றின்
வயதான வேளையில்
பட்டு படுத்திக் காட்டாமல்